சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்: சசிதரூருக்கு சம்மனா?

சுனந்தா புஷ்கர் மர்ம மரணம்: சசிதரூருக்கு சம்மனா?

காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் ஓட்டல் அறை ஒன்றில் மர்மமாக முறையில் மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரனை செய்த டெல்லி காவல்துறாஇ சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் சசி தரூர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. எனவே அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது

இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும்.

Leave a Reply