அஜித், விஜய் ரேஞ்சுக்கு மாறிய சிவகார்த்திகேயன் படம்: ஒரு ஆச்சரிய தகவல்

அஜித், விஜய் ரேஞ்சுக்கு மாறிய சிவகார்த்திகேயன் படம்: ஒரு ஆச்சரிய தகவல்

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அந்த படம் வியாபாரம் ஆகுவது என்பது அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு மட்டுமே நடக்கும்

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ என்ற படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது

டாக்டர் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் டிஜிட்டல் உரிமை உள்பட மற்ற ஏரியாக்களின் உரிமைகளின் வியாபாரமும் நடை பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகிபாபு, கலையரசன், உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Reply