சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ஹீரோ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக டுவிட்டரில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்க உள்ளது

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த அறிவிப்பில் இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் தனுஷின் 44 வது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் பிற நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் மற்றும் இந்த படத்தை இயக்கும் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரங்கள் ஆகியவை இன்னும் ஒருசில தினங்களில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒரே நேரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply