’தளபதி 65’ படத்தை டிராப் செய்கிறதா சன் பிக்சர்ஸ்?

கொரோனாவால் ஏற்பட்ட குழப்பம்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஜய் நடிக்க உள்ள 65ஆவது திரைப்படமான ’தளபதி 65’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக அதிக பட்ஜெட்டில் படமெடுத்தால் நஷ்டம் ஏற்படும் என்ற நிலையில் விஜய்யின் சம்பளத்தை பாதியாக குறைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது

ஆனால் பாதி சம்பளத்திற்கு நடிக்க விஜய் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுவதால் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிராப் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் சன் பிக்சர்ஸ், விஜய் தரப்பு மற்றும் ஏ ஆர் முருகதாஸ் தரப்பினர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் தளபதி 65 படம் தொடரும் என்றும் கூறப்படுகிறது

ஒருவேளை உடன்பாடு ஏற்படவில்லை என்றால் விஜய்யின் அடுத்த படத்தை லைகா உள்பட வேறு நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply