தினகரன், கிருஷ்ணபிரியாவுக்கு சம்மன்: ஜெ மரணம் குறித்த விசாரணை

தினகரன், கிருஷ்ணபிரியாவுக்கு சம்மன்: ஜெ மரணம் குறித்த விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான கமிஷன், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரையும் விசாரணை செய்து வருகிறது

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தினகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தினகரன் வேண்டும் என்றும் அதேபோல் கிருஷ்ண பிரியா, பூங்குன்றன் ஆகியோர்களும் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

மேலும் அனைத்து ஆதாரங்களையும் 7 நாட்களுக்குள் ஒப்படைக்க தினகரன் மற்றும் பூங்குன்றனுக்கு விசாரணை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply