shadow

கோடை விடுமுறையை ஏப்ரல் 1 முதல் தொடங்க வேண்டும். பெற்றோர்களின் கோரிக்கையை கவனிக்குமா அரசு?
students
கோடை விடுமுறை என்பது முழுக்க முழுக்க விடுமுறை காலம் என்பதையும் இந்த காலத்தில் மாணவர்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி மூளையை புத்துணர்ச்சியாக்கி கொள்ள கொடுக்கப்பட்ட காலம் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் கோடை விடுமுறையில் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி பள்ளிகளில் சிறப்புகள் வகுப்புகள் நடத்தாமல் வேறு இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த ஒருசில பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பலர் பதிவு செய்துள்ளனர்.

10ஆம் வகுப்பாக இருந்தாலும், 12ஆம் வகுப்பாக இருந்தாலும் ஜூன் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஒழுங்காக பாடங்கள் நடத்தினாலே போதுமானதாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற இந்த பத்து மாத காலம் நிச்சயம் போதுமானதே. எனவே சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் வெயிலில் மாணவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் அரசு கூறியுள்ள இந்த அறிவுரையை அனைத்து பள்ளி நிர்வாகிகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் இறுதிக்குள் பள்ளி தேர்வுகளை முடித்துவிட்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களையும் கோடை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது பெற்றோர்கள் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் நாளைமுதல் அதாவது ஏப்ரல் 22 முதல் தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே கடுமையான வெயில் அடித்து வருகிறது. முக்கிய தேவைகள் இருந்தாலன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று வானிலை மையமும் சமீபத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே ஏப்ரல் மாத வெயிலின் கொடுமையில் இருந்து மாணவர்களை காப்பாற்ற குறிப்பாக மழலைகள் வகுப்பு மாணவர்களை பாதுகாக்க மார்ச் இறுதிக்குள் அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு ஏப்ரல், மே ஆகிய இருமாதங்களையும் கோடை விடுமுறை காலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசு இதுகுறித்து ஆய்வு செய்து நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம்.

அப்படியே இதையும் கொஞ்சம் படியுங்களேன்..ப்ளீஸ்….

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது. பள்ளிக்கல்வித்துறையின் எச்சரிக்கை

கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் தேவைதானா? ஒரு அலசல்

Leave a Reply