shadow

scvசன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமங்களை மத்திய அரசு நேற்று திடீரென ரத்து செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒப்புதல் கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் சன் நெட்வொர்க் தலைமையில் கீழ் தமிழகம் முழுவதும் செயலப்ட்டு வரும் சுமங்கலி கேபிள் விஷன் மூலம் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சேனல்கள் நிலை திடீரென கேள்விக்குரியாகியுள்ளது.

சன் நெட்வொர்க்கின் சுமங்கலி கேபிள் விஷன், தஞ்சாவூரில் இருந்து செயல்பட்டு வரும் காவேரி டிஜிட்டல் நெட்வொர்க்ஸ், மற்றும் சென்னை அயனாபுரத்தை சேர்ந்த ஜோதிசங்கர் அண்ணாமலை என்பவருக்கு வழங்கப்பட்டிருந்த டிஜிட்டல் உரிமம், ஆகியவை இந்த 17 நிறுவனங்களில் அடங்கும். மேலும் நாக்பூர், புணே (மகாராஷ்டிரம்), நலகொண்டா, தனுக்கு (ஆந்திரம்), ஸ்ரீநகர் (ஜம்மு -காஷ்மீர்), அலாகாபாத், ஆக்ரா (உத்தரப்பிரதேசம்), அமிருதசரஸ் (பஞ்சாப்) ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் உரிமங்களும் ரத்து நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.

மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து சன் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

Leave a Reply