சுலபமான சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

2

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களுக்கும் மிக எளிய பரிகாரங்களாக செய்ய கூடாதவை மற்றும் செய்ய கூடியவை என பிரித்து அளித்துள்ளேன். மிக எளிய அதே சமயத்தில் சக்தி நிறைந்த பரிகாரங்கள் இவை. நடக்க இருக்கும் சக்தி வாய்ந்த சனி பெயர்ச்சி ஹோமம் பற்றிய சிறப்பு பதிவு நாளை வெளிவரும்.

செய்ய கூடாதவை :
அசைவ உணவு பழக்கம் அறவே கூடாது. இது முதல் இடத்தில் இடம் பிடிக்க கூடிய அளவு மிக முக்கியமான ஒன்றாகும். அசைவ பழக்கம் இருப்பின், தொல்லைகள் கண்டிப்பாக பல மடங்காகும்.

புகை தவிர்த்தல் நலம். மதுவும் அப்படியே. மது அருந்தும் பழக்கம் இருந்து விட முடியாதவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சனியை பொருத்தவரை நாணயம் காத்தல், தர்மம் தவறாமை வேண்டும். திருட்டு-பொய் அறவே கூடாது.

உரக்க பேசுதல், கெட்ட வார்த்தை உதிர்த்தல், சோம்பல், இரவு வெகு நேரம் முழித்திருப்பது தவிர்த்தல் வேண்டும். அசுத்தமான இடங்களில், தெருக்களில் உணவருந்துதல், அழுக்கு உடைகளை அணிதல், குளிக்காமல் இருத்தல் தவிர்க்க வேண்டும்.

1 (9)

செய்ய வேண்டியவை :
தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும்.

தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும்.

முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.

அமித்திஸ்ட் கற்கள் சனிக்கு மிகுந்த ப்ரீதி செய்பவை-வெள்ளியில் அணிந்து பயன் பெறலாம்.

சனிக்கு ஹோமம் மற்றும் சனி யந்திரம் வைத்து கொள்வது நலம் தரும்.
கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.

உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து உண்டு வரவும்.

தினசரி தூங்கு முன் கை மற்றும் கால் விரல்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் அழுத்தி தேய்த்து வரலாம்.

Leave a Reply