சீனாவின் சூசோ மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலிற்கு தனது காதலியை கிறிஸ்மஸ் ஷாப்பிங்கிற்காக டவோ சியோ என்னும் 38 வயது நபர் அழைத்துசென்றார்.

தொடர்ந்து 5 மணி நேரம் விதவிதமான ஆடைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கி குவித்த டவோவின் காதலி, டவோ வீடு திரும்பலாமென சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தார்.
மற்றொரு கடையில் காலணிகளுக்கு சலுகை விலை உள்ளதாகவும், அங்கு செல்லவேண்டுமெனவும் அப்பெண் சண்டையிட்டார். அதற்கு, பதிலளித்த டவோ அப்பெண்ணிடம் ஏற்கனவே வாழ்நாள் முழுவதற்கும் அணிய ஆடைகள் மற்றும் காலணிகள் இருப்பதாகவும், இதற்கு மேல் இவற்றை வாங்கிகுவிப்பதில் அர்த்தமில்லை எனவும் கூறி புரியவைக்க முயற்சித்ததாக தெரிகிறது.

இதனை ஒப்புக்கொள்ளாத அந்த பெண் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனமுடைந்த டவோ அவர்கள் நின்றிருந்த 7வது மாடியின் பால்கனியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஷாப்பிங் மாலிற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் டவோவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Leave a Reply