சுபவீரபாண்டியனின் அத்திவரதர் டுவிட்!

 ஹெச். ராஜா கொடுத்த பதிலடி

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் அத்திவரதர் குறித்த சர்ச்சைக்குரிய ஒரு கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்

சுபவீரபாண்டியனின் தனது டுவிட்டரில், ‘ஏன் டா பா 40 வருசம் கழிச்சு அத்திவரதர் மேல் வரதால நல்லது நடக்கும்னு சொல்லிட்டு திரிஞ்சவனுங்கள யாராச்சும் பார்த்தீங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா தனது டுவிட்டரில், ‘உண்மையில் தைரியம் இருந்தா டில்லி மர்க்கஸில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவுடன் கமல்ஹாசன் பட ஸ்டைலில் கட்டிபடி வைத்தியம் செய்து சமூக நல்லிணக்கத்தை நிரூபித்த உடன் அத்திவரதரைப் பார்த்தவரை நான் காட்டுகிறேன்’ என்று கூறியுள்ளார். சுபவீரபாண்டியன் மற்றும் ஹெச்.ராஜா ஆகிய இருவரின் டுவிட்டுக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.