ஒரே ஆண்டில் 25 ஆயிரம் மாணவர்கள் அதிகம்: சென்னை மாநகராட்சி பள்ளிகள் சாதனை!

students

ஒரே ஆண்டில் 25 ஆயிரம் மாணவர்கள் அதிகம்: சென்னை மாநகராட்சி பள்ளிகள் சாதனை!

மாநகராட்சி பள்ளிகளில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

நடப்பு கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக 25 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது என்றும் கடந்த ஆண்டு 90,000 என இருந்த சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தற்போது 1.15 லட்சமாக அதிகரிப்பதாகவும் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது