5வது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனை. வடகொரியா முடிவால் உலக நாடுகள் அச்சம்

5வது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனை. வடகொரியா முடிவால் உலக நாடுகள் அச்சம்

north koreaஅமெரிக்காவும் தென்கொரியாவும் நடத்தி வரும் போர் ஒத்திகையை நிறுத்தினால் அணு ஆயுத சோதனையை நிறுத்தி வைப்பதாக வடகொரியா நேற்று விடுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா நிராகரித்தார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக வெளிவந்துள்ள தகவல்கள் உலக நாடுகளை மேலும் அச்சுறுத்தியுள்ளது.

ஏற்கனவே  4 முறை அணு ஆயுத சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் வடகொரியா தற்போது 5-வது முறையாக மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனையை விரைவில் நடத்தவுள்ளது. வரும் மே மாத தொடக்கத்தில் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் தேர்தலை நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளதால் தேர்தலுக்கு முன்பே தன்னை ஒரு சக்தி வாய்ந்த தலைவராக நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் இந்த புதிய அணு ஆயுத சோதனையை நடத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது;

இது குறித்து கருத்து கூறிய தென்கொரிய அதிபர் பார்க், ‘விரைவில் 5-வது அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது. அதற்கான அறிகுறி தென்பட தொடங்கியுள்ளன. ஒருவேளை சோதனை நடத்தும் பட்சத்தில் அந்நாட்டின் மீது கூடுதலாக வலுவான தடைகளை விதிக்க சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply