சென்னைக்கு மீண்டும் புயல் மழையா? மிரட்டும் பஞ்சாங்கம்

சென்னைக்கு மீண்டும் புயல் மழையா? மிரட்டும் பஞ்சாங்கம்
panchangam
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த மழைக்கு சுமார் 50 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய வானிலை அறிக்கையின்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி செல்வதால், தமிழகத்தில் இனிவரும் நாட்களில் மழையின் அளவு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாங்கத்தின்படி சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 22ஆம் தேதி புயல் வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி கடந்த 14ஆம் தேதி கனமழை பெய்த நிலையில், இதே பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி மீண்டும் சென்னையில் புயலுடன் கூடிய மழை பெய்யுமா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கண்டிப்பாக சென்னையில் மழையும், புயலும் வரும் என பிரபல ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். வானிலை அறிக்கை மழையின் அளவு குறையும் என்றும், பஞ்சாங்கம் மழை மீண்டும் தொடரும் என்று கூறியுள்ள நிலையில் எது உண்மையாகும்? என்பதை வரும் 22ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.