shadow

சென்னையை நோக்கி புயல்? கடந்த ஆண்டு வெள்ளம் மீண்டுமா?

India-floods-mசென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இது புயலாக வலுபெற்று டிசம்பர் 2ஆம் தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் பெரும்பாலான இடங்களில் இன்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும், நாளை மறுதினம் சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதம் கனமழை பெய்ததால் சென்னையே வெள்ளத்தில் மிதந்தது போல் இந்த ஆண்டும் ஏற்படுமா? என்ற அச்சம் நிலவி வருகிறது.

Leave a Reply