shadow

சிங்க் தொட்டியில் தோன்றிய ஹிட்லர் முகம்! வைரலாகும் புகைப்படம்

நம்மூரில் அடிக்கடி மரத்தில், அல்லது சூரியன் நிழலில் பல மதங்களின் கடவுள்கள் தோன்றியதையும், அவற்றை வழிபட ஒரு கூட்டம் இருப்பதையும் பார்த்துள்ளோம். இதேபோல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டீபன் என்பவரது வீட்டில் உள்ள சிங்க் தொட்டியில் ஹிட்லரின் முகம் தெரிவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஸ்டீபன் என்பவரது சிங்க் தொட்டியில் தண்ணீரை திறந்துவிட்டால் அதில் ஹிட்லரின் மீசையுடன் கூடிய முகம் தெரிவதாகவும், அதை கண்டு தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றது. அச்சு அசல் ஹிட்லர் முகம்போலவே தோன்றும் இந்த படத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். இதோ நமது சென்னை டுடே வாசகர்களுக்காக அந்த படம்

Leave a Reply