பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்யலாமா?

பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நின்றுகொண்டு பயணம் செய்யலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததால் பேருந்துகளில் மற்றும் மெட்ரோ ரயில்களில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து உள்ளதை அடுத்து பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.