ஸ்டாலின் டெல்லி பயணம்! பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் அவர், சென்னையில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைக்க அழைப்பு விடுக்க உள்ளார்.

தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நல்ல முறையில் நடத்தி முடிக்க நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.