கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா: முரண்பாட்டின் மொத்த உருவம்தான் திமுகவா?

கருடசேவை உற்சவத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா: முரண்பாட்டின் மொத்த உருவம்தான் திமுகவா?

ஒருபக்கம் ஆண்டாள் பிரச்சனையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் இந்து மக்களுக்கு எதிராகவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கருத்துக்களை கூறி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஸ்டாலின் மனைவி துர்கா திருநாங்கூர் கருடசேவை உற்சவத்தில் கலந்து கொண்டார்

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் திமுகவில் அதிகம் என்று திமுக எம்பி கனிமொழி கூறி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அவர்களுடைய குடும்பத்திலேயே கடவுளை நம்பும் நபர்கள் தான் அதிகம் உள்ளனர் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. குடும்பத்திலேயே தங்கள் கொள்கையை பரப்ப முடியாதவர்கள் தொண்டர்களிடமும், மக்களிடமும் எப்படி பரப்ப முடியும் என்று அரசியல் விமர்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறுபான்மையர் ஓட்டுக்களை பெறவே இந்துமத எதிர்ப்பு என்ற போர்வையில் பகுத்தறிவாளர்கள் போல் திமுகவினர் நடித்து வருவதாகவும், திமுக முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Reply