முதல்வர் பழனிச்சாமிக்கு முதல்முறையாக ஆதரவு கொடுத்த மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிச்சாமிக்கு முதல்முறையாக ஆதரவு கொடுத்த மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதில் இருந்தே அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் குறைகூறி வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வரின் நடவடிக்கை ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசவுள்ளார். முதல்வர்கள் நிலையிலும், அதிகாரிகள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த பேச்சுவார்த்தை விரைவில் பெங்களூரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை, முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க இருப்பது வரவேற்கத்தக்கது என்று மு.க. ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

Leave a Reply