shadow

எதிர்க்கட்சி தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு
stalin
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், 98 இடங்களை கைப்பற்றி பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். எனவே, அவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆவது உறுதியாகியுள்ளது.

மேலும் திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவராக துரைமுருகனும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வயது மற்றும் அவருக்கு ஏற்ற இருக்கை வசதி ஆகிய காரணமாக ‘திமுக தலைவர் கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படவில்லை என்றும், அவருடைய வழிகாட்டுதலின்படி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் செயல்படுவார் என்றும் திமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply