ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் பட்டியலில் சுந்தர் சி, சந்தீப் கிஷான்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களாக கோலிவுட் நடிகர், இயக்குனர்கள் மீது திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.
இதுவரை அவர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகர் சந்திப்கிஷான் ஆகியோர்களை தன்னை ஏமாற்றியவர்களின் பட்டியலில் இணைத்துள்ளார். இதனால் கோலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பு அடைந்துள்ளது.
தன்மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறிய ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடருவேன் என்று சுந்தர் சி கூறியிருந்தாலும் சந்தீப் கிஷான் இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.