கமல் குறித்து கிண்டல் செய்த கம்யூனிஸ்ட்: கலாய்த்த ஸ்ரீபிரியா
கடந்த சில மாதங்களாக கமலஹாசன் குறித்து சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே
அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் நேற்று கமலஹாசன் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
உலகில் இடதுசாரி வலதுசாரி என்ற இரண்டு கொள்கைகள் மட்டுமே இருப்பதாகவும் கமலஹாசன் கூறும் மய்யம் என்ற கொள்கை உலகத்திலேயே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகையும் கமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் தளத்தில் இதற்கு கலாய்க்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்
கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்று அவர் பதிவு செய்துள்ள இந்த ட்விட் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கற்றது கையளவு …கல்லாதது உலகளவு…ம்…! pic.twitter.com/lthE6eKz8l
— sripriya (@sripriya) March 4, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.