shadow

கட்டப்பஞ்சாயத்து செய்யும் நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா கண்டனம்

kushboo1நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை, நடிகை குஷ்பு நடத்தும் நிஜங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நடிகைகள் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சிகளுக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், “ஒரு குடும்ப பிரச்சனையை தீர்க்க வழக்கறிஞர்கள், நீதிமன்றம் அல்லது அதற்கென அமைப்புகள் இருக்கும்போது தொலைக்காட்சியில் வந்து தங்கள் குடும்ப பிரச்சனையை ஏன் சொல்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களுக்கு உண்மையிலேயே பிரச்சனை இருக்கின்றதா? என்பதிலும் சந்தேகம் எழுகின்றது.

குடும்ப பிரச்சனையை தீர்க்க வரும் நடிகைகள் பளபளப்பாக உடையணிந்து வருவதிலேயே ஒரு முரண்பாடு உள்ளது என்றும் ஒரு குடும்ப பிரச்சனை கோர்ட்டுக்கு போனால் 10 அல்லது 100 பேர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் ஆனால் அதே விஷயம் டெலிவிஷனில் காண்பிக்கப்படும்போது உலகம் முழுவதும் தெரியும் என்பதால் இது நல்லதா என்பதை இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply