இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜ்பக்சே ராஜினாமா செய்தது உண்மையா?

நேற்று திடீரென இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகிவிட்டார் என வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது.

பிரதமர் பதவி விலகியதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவை ஆகும். அத்துடன் அவ்வாறான திட்டமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்