இலங்கை தமிழர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு சாத்தியமில்லை. இல.கணேசன்

12இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண்பது என்பது சிறிதும் சாத்தியமில்லாத செயல் என்று பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர் இல.கணேசன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இன்று  கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன்  ”காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நீதிமன்ற உத்தரவை அமலாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. காவிரி நீர் பகிர்வது குறித்து இருமாநிலங்களும் பாதிக்காதவாறு மத்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை எடுக்கும்

இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில்  மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்  இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்பது உடனடியாக நடக்கக்கூடிய காரியமில்லை என்று கூறினார். இல.கணேசனின் இந்த பேட்டி இலங்கை தமிழர்கள் அமைப்புகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply