கொழும்புவை தாக்க விடுதலைப்புலிகள் திட்டமா? அதிபரின் அதிர்ச்சி தகவல்

கொழும்புவை தாக்க விடுதலைப்புலிகள் திட்டமா? அதிபரின் அதிர்ச்சி தகவல்

கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை கடத்தி கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர், பேசியதாவது: ‌கடந்த 2009ஆம் ஆண்டு ‌நடந்த இறுதிக்கட்ட போரின் போது கடைசி இரண்டு வாரங்கள், தான் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும், அப்போது சென்னையில் இருந்து விமானத்தை கடத்தி வந்து கொழும்பு நகரை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் விமான தாக்குதலுக்கு பயந்து முன்னாள் அதிபர் ராஜபக்சே உட்பட பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இறுதி போரை முடித்து வைத்ததே அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நான்தான் என்றும் மைத்ரிபாலா குறிப்பிட்டார்.

இதனிடையே அமைச்சர்களையும் குறிவைத்து தாக்க உள்ளதாக வந்த தகவல் கிடைத்ததையடுத்து, நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களை நாட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்ததாகவும் சிறிசேனா கூறியுள்ளார்.

Leave a Reply