இந்தியாவின் புதிய அரசின் மிரட்டலுக்கு இலங்கை படிபணியாது. இலங்கை அமைச்சர் டிசில்வா

12
இந்தியாவின் புதிய அரசு இலங்கை அரசுக்கு கட்டளையிட முடியாது என்று இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்றும், இதில் கட்டளையிடவோ கருத்து சொல்லவோ இந்தியாவுக்கு உரிமை இல்லை என்றும், டிசில்வா கூறியுள்ளார்.

நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் டிசில்வாஅ கூறியதாவது:

“”இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை எந்த வகையில் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட, இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ எவ்வித உரிமையும் இல்லை.

இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுதான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கை நாடாளுமன்றம் மட்டுமே எடுக்க முடியும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை எப்படி  அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறவேண்டிய அவசியம் இல்லை.

1987ஆம் ஆண்டு இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட சட்டம்தான் 13வது சட்டதிருத்தம். ஆகையால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியது. அதற்கு அப்போதே எதிர்கட்சியாக இருந்த எங்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது” என்று டிசில்வா கூறினார்.

Leave a Reply