shadow

15

இலங்கை ராணுவத்தில் புதிதாக சேர்ந்துள்ள தமிழ்ப்பெண்களை பயிற்சி என்ற போர்வையில் சிங்களர்கள் கடுமையாக தாக்குவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ராணுவத்தில் புதிதாக இணைந்துள்ள தமிழ் இளம்பெண்களுக்கு அங்குள்ள சிறப்பு முகாம்களில் தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பயிற்சி பெறும் தமிழ் பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன.

உடற்பயிற்சியின் போது தவறு செய்யும் தமிழ் பெண்கள் மீது பெரிய தடிகளால் மிகவும் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. தரையில் தவழ்ந்து செல்லும் பயிற்சியில் ஈடுபடும் தமிழ் பெண்களை தடியால் அடித்து அங்குள்ள பயிற்சியாளர்கள் கொடுமை செய்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்யவேண்டும் என்று தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பபு ஏற்பட்டுள்ளது

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1gEoun9″ standard=”//www.youtube.com/v/usGo-v5ypE0?fs=1″ vars=”ytid=usGo-v5ypE0&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2821″ /]

Leave a Reply