shadow

ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் படத்தில் அஜித்?

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க உள்ளார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்க இருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

‘விசுவாசம்’ படத்தைத் தொடர்ந்து H..வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த தகவலே இன்னும் உறுதியாகாத நிலையில், தற்போது இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி குடும்பத்திற்கும், அஜித்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனால்தான் ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார். ஆனாலும் ஸ்ரீதேவி குடும்பத்தினர் இப்போது இருக்கும் நிலையில் படம் தயாரிப்பாளர்களா? என்பதே கேள்விக்குறிதான்

Leave a Reply