ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் முதல் பட அறிவிப்பு

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் முதல் பட அறிவிப்பு

srideviகடந்த 1980கள் முதல் பல வருடங்கள் இந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யின் ‘புலி’ படத்தில் நடித்தார். இந்நிலையில் அவருடைய மூத்த மகள் ஜான்வி விரைவில் தமிழ்,அல்லது தெலுங்கு படத்தில் அறிமுகமாவார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் வருண்தவான் நடிக்கவுள்ள ‘Shiddat’ என்ற படத்தில் ஜான்வி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதால் ஸ்ரீதேவி, தனது மகளை இந்த படத்தில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தில் அலியாபட் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஸ்ரீதேவி மகள் நடிக்க விரும்பியதை அடுத்து அலியாபட் அவருக்காக இந்த படத்தை விட்டுக்கொடுத்ததாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply