மதுரை மாவட்டம், சமயநல்லூரில் இலங்கைக் கொடியை எரிக்க முயன்ற நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மேற்கு ஒன்றிய நாம் தமிழர் இயக்கம் சார்பில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரி சமயநல்லூரில் அஞ்சல் அலுவலகம் முற்றுகை போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலார் கண்ணன் தலைமை வகித்தார். புறநகார் மாவட்ட செயலார் செங்கண்ணன் போராட்டத்தை தொடக்கிவைத்தார். பின்னர், இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்ற, நாம் தமிழர் இயக்க இணை செயலார் செந்தில், ஒன்றியச் செயலார்கள் அலங்கை பாக்கியராஜ், திருமங்கலம் மருது, ஆனையூர் முருகன், அய்யப்பன் உள்பட 20 பேரை சமயநல்லூரில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Leave a Reply