இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி. இந்தியா 50/2
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு நகரில் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், இந்திய அணியை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 2 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து நான்காவது ஓவரில் ரஹானே எல்.பி.டபிள்யூ முறையில் 8 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 15 ஓவர்களில் 50 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் இன்றைய ஆட்டம் அதற்கு மேல் தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி தரப்பில் பிரசாத் மற்றும் பிரதீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்