மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. இலங்கையில் நடத்த முடிவு

மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. இலங்கையில் நடத்த முடிவு

cricketமும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல், பாராளுமன்ற தாக்குதல் ஆகியவை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் சிக்கல் ஏற்பட்டதால் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியும் நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக இரு நாட்டு கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மீண்டும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த போட்டிகளை இந்தியாவில் நடத்தினால் சிவசேனா போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் மூன்றாவது நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போட்டிகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply