இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Dhananjaya de Silvaஇலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை அணி இந்த போட்டியிலும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸ்ஸில் 141.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் எடுத்தது. சண்டிமால் 132 ரன்களும், சில்வா 129 ரன்களும் எடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்ஸில் 125.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. மார்ஷ் 130 ரன்களும், ஸ்மித் 119 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 312 எடுத்துள்ளது. இன்று ஆட்டத்தின் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.