கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாகி தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கும், ராஜஸ்தான் மாநிலும் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தை சேர்ந்த புவனேஸ்வரி குமாரிக்கும் காதல் ஏற்பட்டது.

புவனேஸ்வரி குமாரி நகைவடிவமைப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர்.

இதை தொடரந்து இன்று அவர்களின் திருமணம் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று நடந்தது. இதில் ஸ்ரீசாந்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Leave a Reply