shadow

6கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக தனி அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சில அதிரடி திட்டங்கள் மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் புதிய முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

முதல் கட்டமாக கங்கை நதியில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை போட்டாலோ 3 நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கான சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கங்கை நதியை தூய்மைப்படுத்துவது எங்கள் அரசின் முன்னுரிமையாகும். அதற்காக மற்ற நதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது அர்த்தமாகாது. முதலில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதை நதி தூய்மைக்கான முன்னுதாரணமாக கொண்டு வர உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடி செலவழித்து கங்கையை தூய்மைபடுத்துவதை விட அந்த பணத்தில் நதீநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் நாட்டின் வளம் பெருகும் என தெரிவித்துள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1l6se2S” standard=”//www.youtube.com/v/17Pji8_4T7c?fs=1″ vars=”ytid=17Pji8_4T7c&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5018″ /]

Leave a Reply