shadow

ஸ்பைடர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடித்த ‘ஸ்பைடர்’ படம் குறித்து ஒவ்வொரு புதன்கிழமையும் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் வரும் புதன்கிழமை அதாவது நாளை இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த புதன்கிழமை இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply