விஜய்க்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்க்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

மகேஷ்பாபு நடித்து வரும் ‘ஸ்பைடர்’ படத்தை தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி என்பவருக்கு ‘தளபதி 61’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

ஆனால் ‘தளபதி 61’ படக்குழுவினர் கேட்ட தேதியை ஹரீஷ் பெராடி , ‘ஸ்பைடர் படத்திற்காக ஒதுக்கியிருந்தாராம். பின்னர் ‘தளபதி 61’ படக்குழுவினர் முருகதாசுடன் பேச்சு நடத்தியபோது, ஹரீஷ் பெராடியை ‘தளபதி 61′ படத்தில் நடிக்க அனுமதித்ததாகவும், அவருடைய காட்சிகளை பின்னொரு நாளில் எடுத்துக்கொள்ளவும் முருகதாஸ் முடிவு செய்தாராம். இதற்காக ஹரீஷ் பெராடி மற்றும் தளபதி 61’ படக்குழுவினர் முருகதாஸூக்கு நன்றி தெரிவித்தனர்.

ஹரீஷ் பெராடி ஏற்கனவே யிரத்தில் ஒருவன், ‘கிடாரி’ போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply