shadow

c815706b-b7f3-42e1-bf81-f3cc3ebc320b_S_secvpf

தேவையான பொருட்கள்:

ராஜ்மா  – 1 கப்
ரைஸ் பிரான் ஆயில்  – 150 மிலி
பிரியாணி இலை  – 2
மீடியம் சைஸ் வெங்காயம்  – 2
இஞ்சி  – ஒரு துண்டு
பூண்டுப்பல்  – 8 
மிளகாய்ப் பொடி  2 டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்  – அரை டீஸ்பூன்
சீரகத்தூள்  – ஒரு டீஸ்பூன்
தக்காளி – 3
உப்பு  – தேவையான அளவு
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை 

செய்முறை:

• தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• குக்கரில் ராஜ்மாவை ஐந்து கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும்.

• ஆயிலை சூடுபடுத்தி இதில் பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

• பின்னர் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,  மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும்.

• இதில் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும்.

• இதில் ராஜ்மா, ஆயில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

• பிறகு, அடுப்பைக் குறைத்து வைத்து 15 நிமிடம் வரை வேக விடவும்.

• பின், உப்பு, கரம்மசாலாத்தூள் சேர்த்து 5 நிமிடம் மீண்டும் வேக விடவும்.

• கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.

Leave a Reply