shadow

speed painting 16ஆயகலைகள் 64 என்பது தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கூறிவருவதுண்டு. அந்த 64 கலைகளில் பாடல், இசை மற்றும் நடனம் ஆகிய மூன்று கலைகள் முதல் மூன்று கலைகளாக மன்னர்கள் காலம் முதற்கொண்டு நம் தமிழர்கள் போற்றி வருகின்றனர். இதையடுத்து நான்காவது கலையாக நமது தமிழர்கள் பெரிதும் மதிப்பது ஓவியக்கலை.

பண்டைகாலம் முதற்கொண்டு நமது ஓவியர்கள் கற்பனையாகவோ அல்லது நிஜமான ஒரு பொருளையோ அல்லது மனிதரையோ பார்த்து வரைந்துள்ளனர். நமது தமிழக கோவில்களில் பண்டைக்கால ஓவியர்களின் கைத்திறனை இன்னும் நாம் பார்த்து மகிழலாம்.

 ஓவியக்கலைக்கும் ஓவியனுக்கும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நல்ல மரியாதை உண்டு. இந்த வரிசையில் நமது சென்னையில் ஓவியக்கலையில் சிறந்து விளங்கி பல சாதனை படைத்து வரும் ஓவியர் ஜெய் ஆனந்த் அவர்களை நமது சென்னை டுடே நியூஸ் இணையதளத்திற்காக பேட்டி எடுத்தோம். அவருடைய பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

சென்னையை சேர்ந்த ஜெய் ஆனந்த், ஒரு சிறந்த கெமிக்கல் பொறியாளர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெய் ஆனந்த், பிறவியிலேயே ஒரு ஓவியர் என்று கூறினால் அது மிகையாகாது. சிறுவயதில் நாம் எல்லோரும் சுவற்றில் ஏதாவது படம் வரைந்து விளையாடுவோம். அப்போதெல்லாம் சில பெற்றோர்கள் சுவரில் படம் வரையும் சிறுவர்களை கண்டிப்பார்கள். ஆனால் ஜெய் ஆனந்த்தின் பெற்றோர்கள்  அவர் சிறுவராக இருந்தபோதே அவருடைய ஓவிய அறிவை பார்த்து அவரை பாராட்டியதோடு, எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த ஓவியராக வருவதற்கு ஒரு உந்துதலாக இருந்துள்ளனர்.

danceபள்ளிப்பருவத்தில் ஜெய் ஆனந்திடம் இருந்த ஓவியத்திறமையை பார்த்த அவருடைய ஓவிய ஆசிரியர் அவர் எதிர்காலத்தில் சிறந்த ஓவியராக மாறுவதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். ஜெய ஆனந்தின் ஓவிய ஆசிரியர் தான் அவருடைய ஓவியத்திற்ன் முதல் குரு என்றே சொல்லலாம்.

பள்ளி பருவத்தில் சென்னையின் பல இடங்களில் நடந்த ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். அப்போதே தன்னை ஒரு ஓவியன் என்பதை அவர் உலகிற்கு மெய்ப்பித்து காட்டிவிட்டார்.

ஓவியம் குறித்து எவ்வித முறையான வகுப்புகளுக்கும் செல்லாமல் தனது ஆர்வத்தின் காரணமாக, அவராகவே பல ஓவியங்களை வரைந்து பழக ஆரம்பித்தார்., பென்சில் ஓவியம், ஆயில் பெயிண்டிங், மற்றும் பலவகை ஓவியங்களை வரைந்து தமிழக அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்துள்ளார்.

தற்போது ஜெய ஆனந்த், ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தாலும், இடையிடையே ஓவியக்கலையில் பல சாதனைகளை செய்துகொண்டுதான் இருக்கின்றார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் 7 நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஓவியத்தை வரைந்து தனது ஸ்பீடு பெயிண்டிங் அறிவை மெய்ப்பித்து காட்டி, பலரது பாராட்டுக்களை பெற்றார்.

இந்திய அளவில் ஸ்பீட் பெயிண்டிங் வரைந்து சாதனை படைத்தவர்களில் இரண்டாவது நபர் நமது ஜெய் ஆன்ந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் உள்ள ஸ்பீட் பெயிண்டிங் மேதை டேவிட் காரிபலாடி ( David Garibaldi) அவர்களை தனது மானசீக குருவாக ஏற்று இந்த சாதனையை செய்ததாக கூறினார். டேவிட் காரிபலாடி ஓவியம் வரையும் வீடியோக்களை இணையதளங்களில் பார்த்து, தனது ஸ்பீட் பெயிண்டிங் திறனை வளர்த்துக்கொண்டதாக ஜெய் ஆனந்த் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.மேலும் இவர் ஒரு ஓவியர் மட்டுமல்ல, ஒரு மிகச்சிறந்த நடனக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல இடங்களில் இவர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

dance 1

சென்னையில் ஜெய் ஆனந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வரையும்போது எடுத்த புகைப்படங்கள்:

 

shadow

இவர் பெற்ற விருதுகள்:

1. கடந்த 2002, 2003, மற்றும் 2004 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சென்னை மாவட்ட அளவில் நடந்த ஓவியப்போட்டிகளில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.

2. அரியலூரில் நடந்த தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு சிறந்த ஓவியர் விருதை பெற்றுள்ளார்.

3.கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை கல்லூரிகளுக்கிடையே நடந்த  முக ஓவியம் என்று சொல்லக்கூடிய ஃபேஸ் பெயிண்டிங் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார்.

4.கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் கல்லூரிகளுக்கிடையே நடந்த ஓவியம் மற்றும் கார்ட்டூன் போட்டிகளில் பங்குபெற்று முதல் பரிசை வென்றுள்ளார்.

5. மேலும் 1998 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எண்ணிலடங்கா பரிசுகள் பெற்று சென்னை நகருக்கும், அவருடைய பெற்றோர்களுக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

தேசிய அளவில் திறமை படைத்துள்ள ஜெய் ஆனந்த் அவர்களின் ஓவியத்திறமை, இன்னும் விரிவடைந்து உலக அளவில் மிகச்சிறந்த ஓவியர் என்ற பெருமையை அவர் பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஒரு தமிழர் அதுவும் நமது சென்னையை சேர்ந்த ஒருவர் உலக சாதனை படைக்க அவருடைய பெற்றோர்கள், நண்பர்கள் வரிசையில் நமது சென்னை டுடே நியூஸ் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்துகிறோம்.

ஜெய் ஆனந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வரையும் போது எடுத்த வீடியோ:

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1lpKQ2g” standard=”//www.youtube.com/v/2uSUvIcPQ_A?fs=1″ vars=”ytid=2uSUvIcPQ_A&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7263″ /]

Leave a Reply