சபரிமலைக்கு ஆன்லைனில் பேருந்து முன்பதிவு: எந்தெந்த இணையதளங்கள்?

கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கணக்கில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சபரிமலைக்கு செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்யும் பக்தர்கள் http://tnstc.in, http://redbus.in, http://busindia.com, http://paytm.com ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் .