shadow

48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்யவும் முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதையும் கோவில் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.