shadow

வடகொரிய, தென்கொரிய தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை

இதுவரை பகைநாடுகளாக இருந்த வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள்
தங்கள் பகைமைகளை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ள நிலையில் இருநாட்டு தலைவர்களும் இன்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது இருநாடுகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தை பன்முன்ஜோம் கிராமத்தில் நடைபெறவுள்ளதாகவும்,
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கொரியப்போரை அதிகாரப்பூர்வமாகவும், முறைப்படியும் முடிவுக்கு கொண்டுவருவது பற்றியும், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றியும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை தென்கொரிய ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Leave a Reply