shadow

தென்மாவட்ட ரயில்களில் திடீர் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு

திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் ரெயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் இதோ:

1) திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை திருநெல்வேலி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

2) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில், திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

3) ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி – புதுச்சேரி விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி – கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

4) ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் – சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

5) ஏப்ரல் 29 அன்று கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.