ஜோகன்ஸ்பெர்க் டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது

தென்ஆப்பிரிக்கா அணி 240 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது

தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணியின் இந்த வெற்றியை அடுத்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது