shadow

சொந்த மண்ணில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

cricketதென்னாபிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 12ஆம் தேதி ஆரம்பமான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி அடைந்துள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலி பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி வெறும் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது.

முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் பின் தங்கியிருந்த ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலாக ஆடி 161 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவின் அப்பாட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply