டக்வொர்த்-லீவீஸ் முறையில் இந்தியா தோல்வி

டக்வொர்த்-லீவீஸ் முறையில் இந்தியா தோல்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவீஸ் முறையின்படி தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மழை குறுக்கிட்டதால் 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இதன்படி தென்னாப்பிரிக்க அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்னப்பிரிக்க அணி 1-3 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளது.

Leave a Reply