வெற்றி பெற தென்னாப்பிரிக்காவுக்கு 112 ரன்களே தேவை: 8 விக்கெட்டுக்கள் கைவசம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியை நெருங்கிவிட்டது

ஜோகன்ஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 4ஆம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் வெற்றி பெற 122 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி வெற்றியை நெருங்கிவிட்டது.