shadow

முக்கால் நிர்வாணத்தில் பாட்டு பாடிய பள்ளி மாணவிகள்: விசாரணைக்கு உத்தரவு

தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஹோசா என்ற இனத்தினர் அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனமாக வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இனத்தவர்கள் பல முக்கிய விவகாரங்களில் தங்களது கருத்தை கூறுவதும், அந்த கருத்துக்களை அனுசரித்தே அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதும் நடைமுறையாக இருந்து வருகிறது.. இந்த நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.

பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவிகளின் அந்தர உறுப்புகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் என ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply