தொடரை வெல்கிறதா தென்னாப்பிரிக்கா: இலக்கை நெருங்குவதால் பரபரப்பு

கேப்டவுனில் கடந்த 11ஆம் தேதி ஆரம்பித்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியை நெருங்கி வருகிறது.

கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்தது.

அதன்பின் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது

நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சை விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் இலக்கை எட்ட அந்த அணிக்கு 111 ரன்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது